default-logo
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு
(ஆமோஸ் 4:12)
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு

1.2.சுவிசேஷகனின் முதலாம் சந்திப்பு


சுவிசேஷகனின் முதலாம் சந்திப்பு


அவன் தன் வழக்கத்தின்படி வயல் வெளிகளில் உலாவிக் கொண்டிருந்த ஒரு நாள்: தன்னுடைய புத்தகத்தை வாசித்து வாசித்து, மிகுந்த துக்கசாகரமுள்ளவனாய் இருக்கிறதை நான் கண்டேன். அவன் வாசிக்க, வாசிக்க முன் போல வாய்விட்டு அலறி (அப்போஸ்தலர் 16 : 30, 31) “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்” என்று அழுதான். இப்படிச் சொல்லிக் கொண்டது மல்லாமல், எந்த திசையாய் ஓடலாம் என்று பார்க்கிறவனைப்போல், அந்த மைதானத்தில் அவன் அங்கும் இங்கும் சாடப் போகிறதைப் போலவும் நான் கண்டேன். என்றாலும் அவன் ஓடும் இடம் அறியாதிருந்ததால் நின்ற நிலையிலேதான் நின்றான். அவன் என்னதான் செய்கிறான் பார்ப்போம் என்று நான் அவனைப் பார்த்த வண்ணமாய் இருந்தேன். அப்பொழுது அந்த மைதான வழியாய் சுவிசேஷகன்1 என்னும் பெயருடைய ஒருவர் வந்தார். அவர் இந்த மனுஷனண்டை போய் ஏன் அப்பா அழுகிறாய்? என்று கேட்டதையும் கண்டேன். அவன் சொல்லுகிறான்: ஐயா, என் கையில் இருக்கிற இந்தப் புஸ்தகத்தினால் எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்றும், மரணத்துக்குப் பின் நான் நியாயந் தீர்க்கப்பட வரவேண்டியவன் என்றும் (எபிரேயர் 9 : 27) உணருகிறேன். மரண தண்டனையை அனுபவிக்கவோ எனக்கு மனதில்லை (யோபு 16 : 21, 22) நியாயத்தீர்ப்புக்கு வரவோ என்னால் இயலாது (எசேக்கியேல் 22 : 14) என்று அறிகிறேன் என்பதாய்ச் சொன்னான்.

அதற்கு சுவிசேஷகன்: சாக ஏன் உனக்கு மனதில்லை அப்பா? இந்த வையகத்தின் பாடுகளுக்கு ஒரு கணக்கு இல்லையே என்றார். அதற்கு அவன்: ஐயா ! அது நிஜம்தான், ஆனால் இதோ பாரும், என் முதுகில் இருக்கும் பாரச் சுமை என் சாவோடு இறங்கி, கல்லறையோடு தொலைந்து போகாமல் நரக பாதாள மட்டும் என்னை இழுத்துக் கொண்டு போய் நித்தியாக்கினிப் பள்ளத்தில் உருட்டித் தள்ளிவிடுமே (ஏசாயா 30 : 33) பூலோக சிறைகளில் இருக்கும் அவஸ்தைகளைத் தாங்க என்னால் ஆகாதானால், நியாயந்தீர்க்கப் படவும், பாதாள லோகத்து அக்கினிப் பள்ளத்தின் நித்திய வேதனைகளை சகிக்கவும் என்னால் இயலுமா? இந்த எண்ணங்கள் தான் என் மனதைப் புண்ணாக்கி, பெருமூச்சுவிடவும், அழவும் பண்ணுகிறது என்று சொன்னான்.

உன் நிலைமை இப்படியானால் வேலையும், ஜோலியும் இல்லாத வனைப் போல் ஏன் இந்த வனத்தில் நின்று கொண்டிருக்கின்றாய்? என்று சுவிசேஷகன் கேட்டார். அதற்கு அவன்: ஐயா! நான் எங்கே போக வேண்டும் என்று எனக்குத் தெரியாமல்தான் இந்த வனத்தில் பெருமூச்சு விட்டுத் திரிந்தலைகின்றேன் என்றான். அப்போது சுவிசேஷகன் ஒரு சுருளை அவன் கையில் கொடுத்து இதைப் படித்துப் பார் என்றார். அவன் அதை மெதுவாக விரித்து வாசிக்கவே, “வருங் கோபத்துக்கு பறந்தோடிப் போ” (மத்தேயு 3 : 7) என்ற வாசகம் பெரிய எழுத்துக் களால் எழுதியிருக்கிக்கிறதைக் கண்டான்.

அவன் சுவிசேஷகனுடைய முகத்தைக் கனிவோடு பார்த்து, நான் எங்கே ஓடவேண்டும் ஐயா? என்று கேட்டான். சுவிசேஷகன் தன் கையை நீட்டி (விஸ்தாரமான ஒரு வனத்துக்கப்பால் காட்டி) அதோ இருக்கிறதே அந்த திட்டிவாசல்2 உனக்குத் தெரியுதா? (மத்தேயு 7 : 13, 14) என்று கேட்டார். ஒன்றும் தெரியவில்லையே என்று புலம்பினான். அப்புறம் சுவிசேஷகன்: அதோ தூரத்தில் பிரகாசிக்கிற வெளிச்சமாவது3 தெரிகிறதா? (சங்கீதம் 119 : 105 2 பேதுரு 2 : 19) என்று கேட்டார். ஆம் ஐயா, ஆம், அதோ தெரிகிறாப் போல் இருக்கிறது என்றான். அப்புறம் சுவிசேஷகன்: அந்த வெளிச்சத்தையே நீ நோக்கிக் கொண்டு நேரே நடந்து போ, அங்கே போனால் அந்த திட்டிவாசல் தெரியும். வாசலண்டை போய் தட்டினால் நீ செய்ய வேண்டியது இன்னதென்று அங்கே உனக்குச் சொல்லப்படும் என்று சொன்னார்.


1. சுவிசேஷகன்: இது உண்மையுள்ள ஒரு தேவ ஊழியக்காரனைக் குறிக்கிறது.

2. திட்டிவாசல் நெருக்கமாய் இருக்குமாதலால் அதின் வழியாக ஒருவன் மூட்டையோடு பிரவேசிக்கக்கூடாது. இது நித்திய ஜீவனின் ஒரே வழியாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது. அவர் மூலமாய் இரட்சிப்படைய விரும்புகிறவர்கள் தங்கள் பாவங்களையும், அவ பக்தராhன தோழரையும் வெறுத்து பின்னாலே தள்ளிப் போட வேண்டும்.

3. ஆத்தும இரட்சிப்பை நாடும் ஒருவன் கிறிஸ்துவின் மூலமாயுள்ள இரட்சண்ய வழியைத் துவக்கத்திலேயே தெளிவாய்க் கண்டு கொள்ளக் கூடாமல் இருந்தாலும் இருக்கலாம். அப்படிப்பட்ட சமயத்தில், பாதைக்கு வெளிச்சம் போல் இருக்கும் தேவ வசனத்தை அவன் கருத்தோடு வாசித்து வரவேண்டியது.

மோட்ச பிரயாணம்

  • மோட்ச பிரயாணம்
  • தலையங்கச் செய்தி
  • முகவுரை: சாமுவேல் பவுல் ஐயர்
  • 1.1.பிரயாண ஆவல்
  • 1.2.சுவிசேஷகனின் முதலாம் சந்திப்பு
  • 1.3.திட்டிவாசல் பயணம்
  • 1.4.வன சம்பாஷணை
  • 1.5.நம்பிக்கையிழவின் அவதி
  • 1.6.லோகஞானி சந்திப்பு
  • 1.7.சுவிசேஷகனின் இரண்டாம் சந்திப்பு
  • 1.8.திட்டிவாசல் கோட்டை சேருதல்
  • 1.9.வியாக்கியானி வீடு சேருதல்
  • 1.10.பிரயாணியின் சிலுவைத் தரிசனை
  • 1.11.பிரயாணி கஷ்டகிரி சேருதல்
  • 1.12.பிரயாணி சுருளை இழத்தல்
  • 1.13.பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்
  • 1.14.அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்மைப் பள்ளம்)
  • 1.15.பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்
  • 1.16.பாப்பு ராஷதன் சந்திப்பு
  • 1.17.கிறிஸ்தியான் உண்மையோடு கூடுதல்
  • 1.18.வாயாடி வந்து கூடுதல்
  • 1.19.சுவிசேஷகரின் மூன்றாம் சந்திப்பு
  • 1.20.பிரயாணிகள் மாயாபுரி சேருதல்
  • 1.21.பிரயாணிகள் உபாயியை சந்தித்தல்
  • 1.22.உபாயியின் தோழர் சந்திப்பு
  • 1.23.பிரயாணிகள் திரவியகிரி சேருதல்
  • 1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்
  • 1.25.பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்
  • 1.26.அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்
  • 1.27.பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்
  • 1.28.பிரயாணிகள் அறிவீனனைச் சந்தித்தல்
  • 1.29.பிரயாணிகள் முகஸ்துதியை சந்தித்தல்
  • 1.30.நாஸ்திக சாஸ்திரி சந்தித்தல்
  • 1.31.மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்
  • 1.32.அறிவீனனை மறுபடியும் சந்தித்தல்
  • 1.33.சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை
  • 1.34.பிரயாணிகள் வாழ்க்கைநாடு சேருதல்
  • 1.35.பிரயாணிகள் நதியைக் கடத்தல்
  • 1.36.பிரயாணிகள் மோட்சம் ஏறுதல்
  • 1.37.பிரயாணிகள் மோட்சம் சேருதல்
  • 1.38.அறிவீனனுடைய முடிவு
  • 2.கிறிஸ்தீனாளின் மோட்ச பிரயாணம்
  • 2.1.கூரியபுத்தி பிரசன்னம்
  • 2.2.கிறிஸ்தீனாளின் பிரயாண ஏவுதல்கள்
  • 2.3.அந்தரங்கன் அவளைச் சந்தித்தது
  • 2.4.கிறிஸ்தீனாளின் பிரயாண ஆயத்தம்
  • 2.5.கிறிஸ்தீனாளின் மோட்ச பயணம்
  • 2.6.பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது
  • 2.7.அவர்கள் திட்டிவாசல் சேர்ந்தது
  • 2.8.இடுக்கமான வழிப் பயணம்
  • 2.9.பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்
  • 2.10.அலங்கார மாளிகைப் பிரயாணம்
  • 2.11.பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது
  • 2.12.அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது
  • 2.13.அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்
  • 2.14.தாழ்மை என்னும் பள்ளத்தாக்கு
  • 2.15.மரண நிழலின் பள்ளத்தாக்கு
  • 2.16.சங்கார ராட்சதனை சந்தித்தல்
  • 2.17.யதார்த்தனுடன் கூடுதல்
  • 2.18.அச்சநெஞ்சனைப் பற்றிய சம்பாஷணை
  • 2.19.தன்னிஷ்டத்தைப் பற்றிய சம்பாஷணை
  • 2.20.பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்
  • 2.21.பிரயாணிகள் பரோபகார காயு மடம் விட்டது
  • 2.22.பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை
  • 2.23.பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது
  • 2.24.வலுசர்ப்பத் தொல்லை
  • 2.25.பிரயாணிகள் மாயாபுரியை விட்டது
  • 2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது
  • 2.27.அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்
  • 2.28.பிரயாணிகள் ஆனந்தமலை சேருதல்
  • 2.29.சத்திய வீரதீரனை சந்தித்தல்
  • 2.30.பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்
  • 2.31.பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்
  • 2.32.கிறிஸ்தீனாளின் மரணம்
  • 2.33.மற்ற பிரயாணிகளின் முடிவு
  • 3.ஜாண் பன்னியன்
  • 3.1.மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்
  • 3.2.தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்
  • 3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது
  • 3.4.ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்
  • 3.5.ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை
  • 3.6.தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்
  • 3.7.”என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”
  • 3.8.ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு




Copyright © www.devaekkalam.com. All Rights Reserved.