njt¥ãŸisna c§fŸ m‹ã‹ ftd¤â‰F

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்குத் துதி, கனம், மகிமை உண்டாவதாக. தேவனுடைய அளவற்ற அன்பின் கிருபையால் நமது தேவ எக்காளம் தனது பத்திரிக்கை ஊழிய தேவப் பணியில் 40 ஆம் ஆண்டிற்குள் பிரவேசித்ததையும், கர்த்தருடைய பரிசுத்த ஜனத்திற்கு ஆசீர்வாதமாக நாம் 40 ஆம் ஆண்டு ஸ்தோத்திர மலரை பிரசுரித்ததையும் நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள்.

இந்த 40 ஆம் ஆண்டில் நம் அன்பின் பரம தகப்பன் மற்றொரு பெரிய அதிசயத்தையும் நமது தேவ எக்காள ஊழியத்தில் செய்திருக்கின்றார். நாம் நீண்ட நாட்களாக ஜெபித்து அவர் சமூகத்தில் காத்திருந்து வந்த ஒரு காரியமாக அவர் நமக்கு அற்புத விடை கொடுத்திருக்கின்றார். அவருக்கு நாம் என்ன ஈட்டை செலுத்த முடியும்!

ஆம், நமது தேவ எக்காளம் இப்பொழுது உலகம் எங்குமுள்ள கிறிஸ்தவ மக்கள் வாசித்து பயன்பெறும் வகையில் இணைய தளத்தில் (WEB SITE) இடம் பெற்றுள்ளது. நாம் சமீபத்தில் வெளியிட்ட 40 ஆம் ஆண்டு ஸ்தோத்திர மலரும் கூட அதில் வெளியிடப்பட்டுள்ளது. நாம் நமது தேவ எக்காளத்தில் கடந்த கால நாட்களில் எழுதி வெளியிட்ட பரிசுத்த பக்த சிரோன்மணிகளின் அருமையான வாழ்க்கை வரலாறுகளையும், அவர்களின் அனலூட்டும் பரிசுத்த தேவச் செய்திகளையும் இந்த நமது இணைய தளத்தில் வெளியிட கர்த்தருக்குள் ஜெபித்து அதற்கான பிரயாசங்களை எடுத்து வருகின்றோம். அதின் முதற் கட்டமாக ஆண்ட்ரு போனர் என்ற இங்கிலாந்து தேச பரிசுத்தவானின் வாழ்க்கையையும், "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்" என்ற ஜாண் சார்லஸ் ரைல் என்ற பரிசுத்த பக்த சிரோன்மணியின் பரவசமான தேவச் செய்தி ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றோம்.

தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகள் செல்ல தனது கதவுகளை மூடியிருக்கும் அரேபியா போன்ற அரபு நாடுகளில் வேலை செய்யும் உங்களுக்கு அருமையானவர்களுக்கு நமது தேவ எக்காள இணையதளத்தை அன்பாக அறிமுகம் செய்து வைப்பதுடன் மற்ற நாடுகளில் பணிபுரியும் உங்கள் இனஜன பெந்துக்கள், நண்பர்கள் போன்றோருக்கும் இதைத் தெரிவியுங்கள். எந்த ஒரு சந்தா மற்றும் காணிக்கையுமின்றி அவர்கள் அதை முற்றும் இலவசமாக வாசித்து ஆவிக்குரிய ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் வீடுகளில் இண்டர்நெட் வசதிகள் இருந்தால் நீங்களும் தேவ எக்காளத்தை இனி இலவசமாக வாசித்து மகிழலாம். நமது தேவ எக்காளத்தின் செய்திகளை நமது இணையதளத்தில் வாசித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்ட ஒரு தேவப்பிள்ளையின் இ-மெயில் கடிதத்தை உங்களுடைய சந்தோசத்திற்காக கீழே தருகின்றேன்:-

Dear Brother in the Lord,

Greetings to you in the Name of our loving Saviour Jesus Christ.

I checked your web site and found it to be very nice and uplifting. This is exactly like reading the book Deva Ekkalam. The pleasant colors and pictures are really great and very distinguishing from other web site. I am really attracted to read the articles and other details. I am really happy about all that you have put up on the web site, and I know, it will be a great resource for many people to be spiritually benefited. I will forward this web site as many of my Tamil brothers as possible. The web designer has done a good job. Above all God be the glory!

This is a great work for the Lord brother. I hope that you are preparing for the trip. You are in our daily prayers. God bless you - John.

நமது தேவ எக்காளம் பத்திரிக்கை www.devaekkalam.com என்ற இணைய தளத்தில் உள்ளது. கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM