|
|
"ஓ ஐயாமாரே, உங்களது தனிப்பட்ட வாழ்வின் பரிசுத்தம் உங்களது மரணத்தை ஒரு நல்ல விருந்தாளியாகவும், ஒரு நல்ல நண்பனாகவும், நற்செய்தி கொண்டு வரும் ஒரு தூதுவனாகவும், உங்களைக் காணச் செய்யும். அந்த அற்புத பரிசுத்தமானது மரணத்தை அள்ளி அணைத்து முத்தமிட உங்களுக்கு உதவி செய்யும். இத்தாலி நாட்டு தேவ பக்தன் ஃபாலினஸ் தனது கொலையாளியை அரவணைத்து முத்தமிட்டது போல உங்களது பரிசுத்தமான வாழ்க்கை உங்கள் மரணத்தை வாரி அணைத்து முத்தமாரி பொழிய உங்களுக்கு கை கொடுத்து உதவும்"
(தாமஸ் புரூக்ஸ்) |
"பரிசுத்த வாழ்க்கையை நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், இவ்வுலகில் நீங்கள் பயனுள்ளவர்களாக வாழ அது உதவும். நீங்கள் செய்யும் பிரசங்கங்கள் ஓரிரு மணி நேரத்தில் மறைந்துவிடலாம். ஆனால் உங்கள் வாழ்க்கையோ அந்த வாரம் முழுவதும் மற்றவர்களுக்கு போதித்துக் கொண்டிருக்கும் என்பது உறுதி. ஊழியக்காரரை பேராசை நிறைந்தவர்களாகவும், புகழையும் வசதிகளையும் நாடித்திரிபவர்களாகவும், பெருந்தீனிக் காரர்களாகவும் சாத்தானால் மாற்ற முடியுமானால் அவனால் உங்கள் ஊழியத்தையும் அழிக்கவும் முடியும் என்பது நிச்சயம். மிகுதியான ஜெபத்துடன் நீங்கள் தேவ ஜனத்துக்கு பிரசிங்கிக்கும் வேத பகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள். கருத்துக்களையும், வார்த்தைகளையும் ஆண்டவரிடமிருந்தே பெற்றுக் கொள்ளுங்கள். மார்ட்டின் லூத்தர் தன்னுடைய தலைசிறந்த மூன்று மணி நேரத்தை தினமும் ஜெபத்தில் செலவிட்டார்"
(ராபர்ட் மர்ரே மச்செயின்) |
| என் தேவனுக்கு முன்பாக உள்ள எனது உத்திரவாதம் |
டேனியல் வெப்ஸ்டர் என்ற அமெரிக்கர் தனது முழு அமெரிக்க தேசத்திலும் மாபெரும் மனிதராக ஒரு காலத்தில் கருதப்பட்டார். டேனியல் வெப்ஸ்டர் தலை சிறந்த ராஜ தந்திரியாகவும், புகழ் வாய்ந்த வழக்கறிஞராகவும், மாந்தரின் தலைவனாகவும், சிறப்புமிக்க பேச்சாளருமாகவும் விளங்கினார். அந்த நாட்களில் டேனியல் வெப்ஸ்டருக்கு அமெரிக்க தேசத்தின் மேன்மை பொருந்திய 25 தலைவர்கள் அவரை கௌரவித்து ஒரு சிறப்பான விருந்தை அளித்தனர். அந்த விருந்திற்கு வந்திருந்த 25 பேரில் ஒருவர் அவரைப் பார்த்து "ஐயா, உங்கள் உள்ளத்தில் தோன்றிய மிகவும் பிரதானமான எண்ணம் எது?" என்று கேட்டார். ஒரு கணம் கூட தாமதியாமல் வெப்ஸ்டர் "எனது உள்ளத்தில் தோன்றிய மிகவும் பிரதானமான எண்ணம் என்னவெனில் நான் எனது ஆண்டவருக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்பதே" என்றார்.
அந்தப் பதிலை அவர் கூறிவிட்டு கண்ணீர் பொங்கி வழிய அழுதார். அழுகையின் காரணமாக விருந்திலிருந்து வெளியே செல்ல அனுமதி கேட்டு வெளிச் சென்று விட்டு திரும்பவுமாக வந்து அந்த விருந்தினருக்கு "தேவனுக்கு மனிதனின் உத்திரவாதம்" என்ற பொருளில் 30 நிமிடங்கள் உணர்ச்சி ததும்ப பேசினார். |
"தேவன் ஆயிர வருஷ காலம் நான் எனது பாடுகளில் நிலைகொண்டிருக்க விரும்புவாரானால் நான் அப்படியே அதில் இருக்க மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளுவேன்" என்று ஒரு தேவ பிள்ளை ஒரு சமயம் என்னிடம் சொன்னார்கள். அப்படித்தானா? தேவன் அதை எல்லாம் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. "கொஞ்ச காலம் பாடு அனுபவிக்கவே" நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். உபத்திரவத்தின் குகையில் நாம் இருக்க வேண்டிய காலம் நமக்கு குறிக்கப்பட்டுள்ளது போல அதிலிருந்து நாம் வெளியே எடுக்கப்பட வேண்டிய காலமும் குறிக்கப்பட்டுள்ளது. திராட்சத் தோட்டக்காரர் திராட்ச செடிகளை நறுக்கி அதை சுத்தம்பண்ண ஒரு காலம் இருப்பதைப் போல அவர் தமது சுத்தம்பண்ணும் கத்தியை அப்பால் வைத்துவிட வேண்டிய காலமும் உண்டு. ஆதலால் நாம் தேவனுடைய இரட்சிப்புக்காக நம்பிக்கையோடு காத்திருப்போம். ஒவ்வொன்றிற்கும் ஆண்டவருடைய காலமும், வேளையும் மகா அருமையானது
(மர்ரே மச்செயின்) |
|
|