default-logo
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு
(ஆமோஸ் 4:12)
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு

24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)


எனது இராஜஸ்தான் சுவிசேஷப் பிரயாண நினைவுகள் – 6


நான் எனது தேவ ஊழியங்களை முடித்து இறுதியாக ஜெய்ப்பூர் வந்து சேர்ந்தேன். நான் ஜெய்ப்பூர் வந்ததும் அங்குள்ள அன்பான விசுவாசிகள் தங்கள் தங்கள் வீடுகளுக்கு என்னை அழைத்துச் சென்று மிகவும் அன்போடு உபசரித்தனர். பட்டினி பசியாக கிடந்து வெல்லத்தையும், தண்ணீரையும் குடித்து ஊழியம் செய்து திரும்பிய என்னை வட இந்திய சுவையான ஆகாரங்களால் என் வயிற்றையும் கூட நிரப்ப அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டார்கள். இராஜஸ்தானத்தில் அடிமையின் மூலம் நடைபெற்ற ஊழியங்களின் சகல விபரங்களையும் அவர்கள் கேட்டு கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

“இராஜஸ்தானின் கிராமங்களுக்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல இதுவரை மிகவும் பயத்தோடிருந்த எங்களைத் தேவன் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிலிருந்து உங்களைக் கொண்டு வந்து எங்களை வெட்கப்படுத்திவிட்டார். எங்கள் கண்கள் திறந்துவிட்டன. இனி நாங்கள் நிச்சயம் ராஜஸ்தான் கிராமங்களுக்குச் சென்று தேவனுடைய சுவிசேஷத்தை தைரியமாகக் கூறுவோம்” என்று மிகவும் உணர்ச்சிவசப் பட்டவர்களாக பாஸ்டர் சகோதரன் C.V.ராபர்ட்ஸ் அவர்கள் சொன்னார்கள். விசுவாசிகளிடம் நான் போவதற்கு விடைபெற்றபோது உண்மையில் அவர்கள் கண்கலங்கினார்கள். “நீங்கள் போக வேண்டாம். எங்களோடிருந்து தேவ ஊழியம் செய்யுங்கள்” என்று என்னை மிகவும் வற்புறுத்தினார்கள். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.

நான் எனது தென் இந்திய பயணத்தை ஆரம்பிப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் பாஸ்டர் சகோதரன் ராபர்ட்ஸ் அவர்கள் மிகவும் உள்ளமுருகி தேவ அன்பின் பாரத்தோடு எனக்காக ஜெபித்து என்னை ஆசீர்வதித்தார்கள். பின்னர் நான் ஜெய்ப்பூர் ரயில்வே ஜங்ஷனுக்கு வந்து சேர்ந்தேன். அங்கிருந்து ஆக்ரா பட்டணம் செல்லும் எக்ஸ்பிரஸ் நடு இரவில் புறப்படுகின்றது. அந்த வேளை இருந்த கொடிய குளிரிலும் கர்த்தருடைய பிள்ளைகள் மூவர் என்னை வழி அனுப்ப ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். ரயில் புறப்படும் நேரம் வந்தது. என்னை வழி அனுப்பி வைக்க வந்ருந்த மூன்று தேவ பிள்ளைகளும் என்னைத் தங்களுடைய மார்போடணைத்து முத்தமிட்டு அனுப்பினர். கிறிஸ்துவுக்குள்ளான அவர்களின் அன்பு அவ்வளவு பெரியதாக விருந்தது. கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.

ரயில் புறப்பட்டதும் என் நீண்டகால ஆவலைப் பூர்த்தி செய்த என் நேச இரட்சகரை முழு இருதயத்தோடும் துதித்தேன். இருளைக் கிழித்துக்கொண்டு ஆக்ரா நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் வர, வர ஒரு வார்த்தை மட்டும் என் காதுகளில் தொனித்துக் கொண்டே இருந்தது. இராஜஸ்தானில் நான் ஊழியம் செய்த நாட்களில் ஒவ்வொரு சுவிசேஷ துண்டுப்பிரதியையும் நான் மக்களுக்குக் கொடுக்கும் சமயங்களில் அவர்கள் என்னைப் பார்த்து கேட்கும் ஒரு கேள்வி அது (மத்லப் கியா ஹை) என்பதாகும். “இந்த தாளின் அர்த்தம் என்ன?” “இந்த காகிதத்தை எதற்காகக் கொடுக்கின்றீர்கள்?” என்பதே அவர்கள் எழுப்பும் வினா!

மத்லப் கியா ஹை: ஆம் இதை வாசிக்கும் தேவப்பிள்ளையே, இராஜஸ்தானின் தேவ ஊழியம் எத்தனை அவசியமானது என்பது உங்களுக்குத் தெரிகின்றதா? நீங்களும் நிச்சயமாக உங்கள் நேசரை, உங்களுக்காகச் சிலுவையைத் தெரிந்து கொண்ட அன்பரை அந்த இராஜஸ்தான் மாநிலத்தில் சென்று அறிவிக்க கர்த்தர் விரும்புகின்றார் என்பதை மறவாது உங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

அன்பரின் நேசம்

  • அன்பரின் நேசம்
  • 1.தலையங்கச் செய்தி
  • 2.பாழான நிலத்தில் என்னைத் தமக்கெனக் கண்டுகொண்ட தேவன்
  • 3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது
  • 4.1.என்னை வெகுவாக கவர்ந்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்
  • 4.2.சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்
  • 4.3.சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்
  • 4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்
  • 5.நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெற்றோர்
  • 6.தொலைக்காட்சி, செய்தித் தாட்களுக்கு விலக்கி காத்துக்கொண்டேன்
  • 7.பண ஆசை, பெயர் புகழ்ச்சி என் வாழ்வில் இடம் பெறவில்லை
  • 8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்
  • 9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்
  • 10.உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்
  • 11.ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை
  • 12.ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசும் குரல் கேட்டேன்
  • 13.தேவன் என் வாழ்வில் நிகழ்த்திய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்
  • 14.தேவ எக்காளம் பத்திரிக்கையை வெளியிட தேவ ஞானம்
  • 15.தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய தேவ எக்காளம் பத்திரிக்கை
  • 16.தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்
  • 17.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்
  • 18.உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
  • 19.நித்திய கன்மலையாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்
  • 20.1.நேப்பாள தேச தேவ ஊழிய நினைவுகள் (1)
  • 20.2.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (2)
  • 20.3.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (3)
  • 20.4.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (4)
  • 20.5.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (5)
  • 21.1.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (1)
  • 21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)
  • 21.3.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (3)
  • 21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)
  • 21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)
  • 22.1.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (1)
  • 22.2.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (2)
  • 22.3.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (3)
  • 22.4.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (4)
  • 23.1.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (1)
  • 23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)
  • 23.3.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (3)
  • 23.4.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (4)
  • 24.1.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (1)
  • 24.2.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (2)
  • 24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)
  • 24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)
  • 24.5.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (5)
  • 24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)
  • 24.7.இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்
  • 25.இமாச்சல் பிரதேச தேவ ஊழிய நினைவுகள்
  • 26.1.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (1)
  • 26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)
  • 26.3.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (3)
  • 26.4.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (4)
  • 26.5.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (5)
  • 27.உமது வேதம் நாள் முழுவதும் என் தியானம்
  • 28.தேவ ஜனமே உனக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்
  • 29.நித்தியமே, ஐயோ நித்தியமே! முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே!
  • 30.தேவ ஜனம் பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு




Copyright © www.devaekkalam.com. All Rights Reserved.