default-logo
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு
(ஆமோஸ் 4:12)
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு

2.1.கூரியபுத்தி பிரசன்னம்


கூரியபுத்தி பிரசன்னம்


நான் சொப்பனம் காண்கையில், இதோ விருத்தாப்பியமுள்ள ஒரு துரை நான் படுத்திருந்த இடத்துக்கு வந்தார். அவர், நான் எந்த திசையாய்ப் பயணம் போகிறேனோ அந்த திசையாகவே அவரும் கொஞ்ச தூரம் வருகிறவரானதால் அவரோடு கூடிப்போவது உத்தமம் அல்லவா என்று எண்ணி நானும் எழுந்து பயணப்பட்டாற் போல் இருந்தது. நாங்கள் இருவரும் வழிநடக்கையில் பிரயாணிகள் எப்போதும் செய்கிற வழக்கப்படி நாங்களும் சம்பாஷணை பண்ணிக்கொண்டு போகிறதுபோலவே இருந்தது. எங்கள் பேச்சு கிறிஸ்தியானையும் அவன் பண்ணின பிரயாணத்தையும் பற்றின தாகவே இருந்தது. நாங்கள் சம்பா ஷணையை ஆரம்பித்தது இப்படித்தான்:

ஐயா! அதோ நமது பாதையின் இடதுபாரிசமாய் அடியில் தெரிகிறதே அது எந்த ஊர்? என்று நான் கேட்டேன்.

அதற்கு கூரியபுத்தி என்ற பேருடைய அவர், அதுதான் நாசபுரி என்ற பட்டணம், அதில் அனந்தம் குடிகள் உண்டு. ஆனால் அவ்வளவு பேரும் பிரபல துஷ்டரும் சர்வ சோம்பேறிகளாய் இருக்கிறார்கள் என்று சொன்னார்.

உடனே நான், அது அந்தப் பட்டணம்தான் என்று நினைத்துக் கொண்டு, நான் ஒரு தரம் அந்த ஊர் வழியாகப் போனேன். அதைக்குறித்து நீர் சொல்லும் சாட்சி உள்ளதுதான் என்று சொன்னேன்.

கூரியபுத்தி: உள்ளதே உள்ளது. அங்கே வாசம் பண்ணு கிறவர்களை மெய்யாகவே மெச்சிப் பேச ஏதுவிருக்குமானால் எனக்கு மெத்த சந்தோசமாய் இருக்கும் என்றார்.
அப்போது நான் அப்படியானால் நீர் காரியங்களை நிதானமாய் வரையறுத்துக் கொள்ளுகிற யூகசாலி என்றும் நலமானவைகளைக் குறித்து கேட்கவும் பேசவும் பிரியமுடையவர் என்றும் எனக்குத் தோன்றுகிறது. ஐயா! இந்த ஊரிலிருந்து சில காலத்துக்கு முன் மேலோகத்துக்கு பயணம் போன கிறிஸ்தியான் என்ற பேருடைய ஒருவனைக் குறித்து ஏதாவது செய்தி கேள்விப்பட்டிருப்பீரா என்று கேட்டேன்.

கூரிபுத்தி: ஏதாவது செய்தியா! அவனுடைய பிரயாணத்தில் அவனுக்கு உண்டான இடையூறுகள், வருத்தங்கள், போர்கள், சிறையிருப்புகள், புலம்பல்கள், பெருமூச்சுகள், பயங்கரங்கள், அச்சங்கள் எல்லாவற்றையும் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது மாத்திரமா? அவன் பேர் நமது தேசம் முழுவதிலும் தொனிக்கிறது. அவனையும் அவன் காரியங்களையும் அறியாதவர்களும் அவனுடைய பிரயாண விபரங்களின் நாளாகம புஸ்தகம் இல்லாதவர்களுமான வீட்டுக்காரர் மெத்தக் கொஞ்சப்பேர்தான். அவனுடைய அபாயமான பிரயாணம் அநேகரை ஏவிவிட்டு அவனைப்போல பயணம் புறப்படவும் செய்திருக்கிறதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் இங்கே இருக்கையில் எங்களுடைய பார்வைக்கு பைத்தியக்காரனாக காணப்பட்டபோதிலும், அவன் போன பின்பு இப்பொழுது எல்லாராலும் வெகு மேன்மையாய் பேசிக்கொள்ளப்படுகிறான். 1 அவன் இப்பொழுது இருக்கிற இடத்தில் ஜெயவீரன் போல் இருக்கிறான் என்றும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவன் பட்ட அவதிகளில் எவன் தலையிடுவான் என்று சொல்லிக்கொண்ட பலர் அவன் அனுபவிக்கிற வாழ்வுகளை எண்ணி வாய் ஊறுகிறார்கள் என்றார்.

அப்போது நான், அவர்கள் அவனைக் குறித்து நினைப்பதெல்லாம் நிஜமானதாய் இருந்தால் அவர்கள் நினைவு நல்லதுதான். ஏனெனில், அவன் அப்போது ஜீவ ஊற்றினிடத்திலும் அதின் கரையோரத்திலும் வாசம்பண்ணி, அவ்விடத்தில் அவன் அனுபவிக்கிறதை எல்லாம் கஷ்டமில்லாமலும், துக்கமில்லாமலும் அனுபவித்துக் கொண்டிருக் கிறான். ஆதலால் அவன் இருக்கிற இடத்தில் பாக்கியவானாய் வாழுகிறான் என்று அவர்கள் நினைத்தார்களானால் அது யதார்த் தமான நினைவுதான். ஏனெனில் அவ்விடத்துச் சந்தோசங்கள் சஞ்சலம் கலந்தவைகள் அல்ல. ஆனால் ஜனங்கள் அவனைப்பற்றி என்னதான் பேசிக்கொள்ளுகிறார்கள் என்று தயவுசெய்து சொல்லமாட்டீரா? என்று நான் கேட்டேன்.

கூரியபுத்தி: அவர்கள் பேசிக்கொள்ளுகிறதா? ஜனங்கள் அவனைக் குறித்து வெகு வெகு விநோதங்களை எல்லாம் பேசிக் கொள்ளுகிறார்கள். அவன் இப்பொழுது வெண்ணுடை தரித்து வீதிகளில் உலாவுகிறான் (வெளி 3 : 4) என்றும் கழுத்தில் தங்கசரப்பணி அணிந்திருக்கிறான் என்றும் தலையில் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொற்கிரீடம் தரித்திருக்கிறான் என்றும் சிலர் சொல்லுகிறார்கள். வேறு சிலர், அவனுடைய பிரயாணத்தில் வெளிப்பட்ட ஒளிமய ரூபிகளைப் போன்ற கூட்டத்தார் அவனுக்குத் தோழராய் இருக்கிறார் கள் என்றும் இவ்விடத்தில் அயல்வீட்டுக்காரர் ஒருவருக் கொருவர் எப்படி உறவாடிக் கொள்ளுவார்களோ அப்படி அவர்கள் இவனோடு உறவாடுகிறார்கள் என்றும் சொல்லுகிறார்கள். இதுவும் அல்லாமல் அவன் இப்பொழுது வாசஞ்செய்கிற தேசத்தின் அரசர் தமது விலையுயர்ந்த கொலுமண்டபத்தில் வாசம்பண்ணும்படி ஒரு அலங்கார மாளிகையை அவனுக்குக் கொடுத்திருக்கிறார் என்றும் அவன் ஒவ்வொரு நாளும் அரசனோடு புசித்துக் குடித்து உலாவி சம்பாஷித்துக் கொண்டிருக்கிறான் என்றும் அவ்விடத்திலுள்ள யாவருக்கும் நியாயாதிபதியாய் இருக்கிறவருடைய மலர்ந்த முகமும் தயாளமான பேச்சும் அவனுக்கு கிடைக்கிறதென்றும் (சகரியா 3 : 7 லூக்கா 14 : 14, 15) உறுதியாய்ச் சொல்லுகிறார்கள். இதுமாத்திரமோ? அவன் போயிருக்கும் தேசத்தின் ஆண்டவராகிய ராஜ பிரபு இந்த திசைகளுக்கு சீக்கிரம் வந்து அந்த கிறிஸ்தியான் மோட்ச பிரயாணம் செய்ய ஆரம்பித்ததை அவர்கள் கண்டபோது அவனுடைய அயலார் முதலியவர்கள் அவனை அவ்வளவு அற்பமாய் எண்ணி பரியாசமும் நிந்தையும் செய்ய தலைப்பட்டதற்கு காரணம் ஏதாவது உண்டா என்று விசாரித்து அறியப்போகிறார் என்றும் சிலர் எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். (யூதா 14, 15 வசனங்கள்) ஏனெனில் அவன் இப்பொழுது தன் அதிபதிக்கு அதிகப் பிரியமானவனாய் இருக்கிறான் என்றும் கிறிஸ்தியானுக்கு நேரிட்ட கனவீனங்கள் எல்லாவற்றையும் குறித்து அவர் கரிசனை கொண்டு அவை அனைத்தும் தமக்கே செய்யப்பட்ட அவமானங்களாக 2 மனதில் எண்ணிக்கொண்டிருக்கிறார் என்றும் (லூக்கா 10 : 16) அவர் அப்படி அவன்மேல் பிரியங்கொள்ளுகிறது அதிசயம் அல்ல, ஏனென்றால் அவர்பேரில் அவன் கொண்ட அன்பின் தாபம் அப்படிப்பட்டது என்றும் அவர்களே சொல்லிக் கொள்ளுகிறார்கள் என்றார்.

அதற்கு நான், உம்முடைய வார்த்தைகளைக் கேட்கிறதால் என் மனதில் உண்டாகிற சந்தோசம் இவ்வளவென்றில்லை. அந்த ஏழை மனுஷனையிட்டுத்தான் எனக்கு அதிக சந்தோசம் உண்டாகிறது. இப்பொழுது அவன் தன் வேலையிலிருந்து ஓய்ந்திருக்கிறதும் கண்ணீரின் பலனை களிப்போடு அறுப்பதும் எனக்கு சந்தோசத்தை உண்டாக்குகிறது. அவன் தன் சத்துருக்களின் அபாயங்கள் செல்லும் தூரத்துக்கு அப்பால் போய்விட்டதும் அவனைப் பகைக்கிறவர் களுடைய எல்லையை தாண்டிவிட்டதும் சந்தோசம்தான். (வெளி 14 : 13. சங்கீதம் 126 : 5, 6) அவனைப்பற்றிய சமாசாரம் இந்த நாடெங்கும் பரம்பிவிட்டதும் என்னைச் சந்தோசப்படுத்துகிறது. அது இன்னும் மோட்ச பிரயாணம் புறப்படாத அநேகரை புறப்பட ஏவி நன்மையை உண்டாக்க மாட்டாதென்று யார் சொல்லக்கூடும்? ஐயா ! அவனைப் பற்றிய செய்தி எல்லாம் என் மனதில் இன்று நடந்தாற்போல் இருக்கிறது. ஆனால் அவனுடைய மனைவியையும், மக்களையும் குறித்து ஏதாவது கேள்விப்பட்டிருப்பீரா? ஐயோ ! அந்த ஏழை ஆத்துமாக்கள் என்னதான் செய்தார்களோ!

கூரியபுத்தி: யாரைக் குறித்து கேட்கிறாய்? கிறிஸ்தீனாளையும் அவள் மக்களையும் குறித்தா? கிறிஸ்தியான் எப்படியோ அப்படியே அவர்களும் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்கள் எல்லாரும் ஆரம்பத்தில் அவனைப் பைத்தியக்காரனாக்கி, கிறிஸ்தி யான் அழுதாலும் அங்கலாய்த்தாலும் கெஞ்சினாலும் அதை எல்லாம் அசட்டைபண்ணினபோதினும், அப்புறம் அவர்கள் எண்ணம் மாறினதால் அவர்களும் மூட்டைக்கட்டிக்கொண்டு பயணப் பட்டார்கள்.

நல்ல காரியம், மெத்த சந்தோசம்! ஆனால் பெண் ஜாதியும் பிள்ளைகளும் எல்லாருமா?

கூரியபுத்தி: ஆம், எல்லாரும்தான். அதின் விபரம் எல்லாம் எனக்கு நன்றாய்த் தெரியும். அவர்கள் எல்லாரும் புறப்பட்ட சமயத்தில் நான் அவர்கள் வீட்டண்டை நின்றேன். அந்த சமாச்சாரம் எல்லாம் எனக்கு திட்டமாய் தெரியும்.

அப்போது அந்தச் செய்தியை நிஜமாகவே நடந்ததென்று ஒருவன் சொல்லலாம் போலத் தோன்றுகிறதே என்று சொன்னேன்.

கூரியபுத்தி: அதை நிஜம் என்று சொல்ல நீ பயப்பட வேண்டிய தில்லை. அவர்கள் எல்லாரும் மோட்ச பிரயாணத்தில் புறப்பட்டு விட்டார்கள். அந்த நல்ல ஸ்திரீயும் அவளுடைய நான்கு பிள்ளைகளும் போனது நிஜம். நாம் இருவரும் ஒரே வழியாக இன்னும் வெகு தூரம் போவோம்: ஆகையால் அதின் விபரங்களை எல்லாம் நான் உனக்குச் சொல்லுகிறேன், கேள்:


1. யாதாம் ஒருவனுடைய விசேஷமாய் ஒரு பக்திமானுடைய நற்குணங்கள் அவன் உயிரோடு இருக்கிறபோது அதிகமாய் கவனிக்கப்படாவிட்டாலும் அவன் மரித்தபின் நன்றாய் மதிக்கப்படுகின்றன.

2. தேவன் தமது ஜனங்களை தம்முடைய அவயவங்கள் போல நினைத்து தமக்குப் பதில் ஆட்களாக அவர்கள் இந்தப் பூமியில் இருக்கிறபடியால் அவர்களுக்குச் செய்யப்படுகிற நன்மை தீமைகளை தமக்கே செய்ததுபோல பாவிக்கிறார். மத்தேயு 25 : 35 – 45 பார்க்க.

மோட்ச பிரயாணம்

  • மோட்ச பிரயாணம்
  • தலையங்கச் செய்தி
  • முகவுரை: சாமுவேல் பவுல் ஐயர்
  • 1.1.பிரயாண ஆவல்
  • 1.2.சுவிசேஷகனின் முதலாம் சந்திப்பு
  • 1.3.திட்டிவாசல் பயணம்
  • 1.4.வன சம்பாஷணை
  • 1.5.நம்பிக்கையிழவின் அவதி
  • 1.6.லோகஞானி சந்திப்பு
  • 1.7.சுவிசேஷகனின் இரண்டாம் சந்திப்பு
  • 1.8.திட்டிவாசல் கோட்டை சேருதல்
  • 1.9.வியாக்கியானி வீடு சேருதல்
  • 1.10.பிரயாணியின் சிலுவைத் தரிசனை
  • 1.11.பிரயாணி கஷ்டகிரி சேருதல்
  • 1.12.பிரயாணி சுருளை இழத்தல்
  • 1.13.பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்
  • 1.14.அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்மைப் பள்ளம்)
  • 1.15.பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்
  • 1.16.பாப்பு ராஷதன் சந்திப்பு
  • 1.17.கிறிஸ்தியான் உண்மையோடு கூடுதல்
  • 1.18.வாயாடி வந்து கூடுதல்
  • 1.19.சுவிசேஷகரின் மூன்றாம் சந்திப்பு
  • 1.20.பிரயாணிகள் மாயாபுரி சேருதல்
  • 1.21.பிரயாணிகள் உபாயியை சந்தித்தல்
  • 1.22.உபாயியின் தோழர் சந்திப்பு
  • 1.23.பிரயாணிகள் திரவியகிரி சேருதல்
  • 1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்
  • 1.25.பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்
  • 1.26.அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்
  • 1.27.பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்
  • 1.28.பிரயாணிகள் அறிவீனனைச் சந்தித்தல்
  • 1.29.பிரயாணிகள் முகஸ்துதியை சந்தித்தல்
  • 1.30.நாஸ்திக சாஸ்திரி சந்தித்தல்
  • 1.31.மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்
  • 1.32.அறிவீனனை மறுபடியும் சந்தித்தல்
  • 1.33.சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை
  • 1.34.பிரயாணிகள் வாழ்க்கைநாடு சேருதல்
  • 1.35.பிரயாணிகள் நதியைக் கடத்தல்
  • 1.36.பிரயாணிகள் மோட்சம் ஏறுதல்
  • 1.37.பிரயாணிகள் மோட்சம் சேருதல்
  • 1.38.அறிவீனனுடைய முடிவு
  • 2.கிறிஸ்தீனாளின் மோட்ச பிரயாணம்
  • 2.1.கூரியபுத்தி பிரசன்னம்
  • 2.2.கிறிஸ்தீனாளின் பிரயாண ஏவுதல்கள்
  • 2.3.அந்தரங்கன் அவளைச் சந்தித்தது
  • 2.4.கிறிஸ்தீனாளின் பிரயாண ஆயத்தம்
  • 2.5.கிறிஸ்தீனாளின் மோட்ச பயணம்
  • 2.6.பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது
  • 2.7.அவர்கள் திட்டிவாசல் சேர்ந்தது
  • 2.8.இடுக்கமான வழிப் பயணம்
  • 2.9.பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்
  • 2.10.அலங்கார மாளிகைப் பிரயாணம்
  • 2.11.பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது
  • 2.12.அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது
  • 2.13.அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்
  • 2.14.தாழ்மை என்னும் பள்ளத்தாக்கு
  • 2.15.மரண நிழலின் பள்ளத்தாக்கு
  • 2.16.சங்கார ராட்சதனை சந்தித்தல்
  • 2.17.யதார்த்தனுடன் கூடுதல்
  • 2.18.அச்சநெஞ்சனைப் பற்றிய சம்பாஷணை
  • 2.19.தன்னிஷ்டத்தைப் பற்றிய சம்பாஷணை
  • 2.20.பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்
  • 2.21.பிரயாணிகள் பரோபகார காயு மடம் விட்டது
  • 2.22.பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை
  • 2.23.பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது
  • 2.24.வலுசர்ப்பத் தொல்லை
  • 2.25.பிரயாணிகள் மாயாபுரியை விட்டது
  • 2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது
  • 2.27.அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்
  • 2.28.பிரயாணிகள் ஆனந்தமலை சேருதல்
  • 2.29.சத்திய வீரதீரனை சந்தித்தல்
  • 2.30.பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்
  • 2.31.பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்
  • 2.32.கிறிஸ்தீனாளின் மரணம்
  • 2.33.மற்ற பிரயாணிகளின் முடிவு
  • 3.ஜாண் பன்னியன்
  • 3.1.மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்
  • 3.2.தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்
  • 3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது
  • 3.4.ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்
  • 3.5.ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை
  • 3.6.தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்
  • 3.7.”என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”
  • 3.8.ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு




Copyright © www.devaekkalam.com. All Rights Reserved.