ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி
நீ ஜெபிக்கும்போது உனது இருதயமானது தேவனுக்கு ஏறெடுக்க நன்றிப் பெருக்கோடு கூடிய புகழ்ச்சி வார்த்தைகள் இல்லாதிருந்தாலும் அதைப்பற்றிப் பரவாயில்லை. ஆனால் நீ தேவனுக்கு ஏறெடுக்கும் மன்றாட்டு வார்த்கைளில் உனது முழுமையான இருதயக் கவனம் இல்லாமல் போய்விட அனுமதித்துவிடாதே.
ஜெபம் ஒரு மனிதனை பாவம் செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தும் அல்லது பாவமானது ஒரு மனிதனை ஜெபிக்கக் கூடாதவாறு நயங்காட்டி ஜெபத்தை தடை செய்யும்.
ஒரு மனிதனுக்குள்ள தேவனைத்தேட வேண்டும் என்ற ஜெப வாஞ்சையின் ஆவியானது அநேக ஆயிரம் பொன் வெள்ளியைக் காட்டிலும் அளவிட இயலாத மாபெரும் பொக்கிஷமாகும்.
லோக மாந்தரே, அடிக்கடி ஜெபம்பண்ணுங்கள். ஏனெனில், அது ஒன்றே நமது ஆத்துமாவை வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளின் தாக்குதலின்று நம்மைப் பாதுகாக்கும் கேடயமாகும். ஜெபமானது நாம் தேவனுக்கு செலுத்தும் ஜீவபலியாகவும், சாத்தானை அடித்து விரட்டி ஓட்டும் கண் எரிச்சலின் தீப்புகையாகவும் உள்ளது என்பதை நாம் ஒருக்காலும் மறந்துவிடக்கூடாது.