தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்
தேவ எக்காள பத்திரிக்கையை வாசித்து தங்கள் ஆவி ஆத்துமாவில் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் தொகை ஏராளம் ஏராளமாகும். கடந்த ஆண்டுகளில் அப்படி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்ட தேவ மக்களின் கடிதங்களை எல்லாம் நான் பத்திரமாக ஃபைல் பண்ணி வைத்திருந்தேன். அந்த பைல்கள் எல்லாம் பல ஆண்டு காலமாக என்னோடேயே இருந்தது. திடீரென எனக்கு ஒரு யோசனை வந்தது. அந்த பைல்கள் மூலமாக சாத்தான் “ஓ, நீ ஆண்டவருக்கு எத்தனை பெரிய ஊழியத்தைச் செய்திருக்கின்றாய். நீ எத்தனை பெரிய ஆள்” என்ற வீண் பெருமையைக் கொண்டு வந்துவிடக்கூடாது என்று பயந்து அத்தனை பைல்களையும் ஒரு நாள் தீயில் போட்டு எரித்துச் சாம்பலாக்கினேன். என் வசமிருந்த சில கடிதங்களை கர்த்தருடைய நாம மகிமைக்காகவும், உங்களுடைய ஆசீர்வாதத்திற்காகவும் கீழே தருகின்றேன். ஜெபத்தோடு வாசித்து அன்பின் ஆண்டவருக்கு துதி செலுத்துங்கள்.
Dear Mr. N. Samuel in Christ,
Thank you so much for your “DEVA EKKALAM” which I have been receiving since last year for which, I am sure, my good friend Mr. Sam Kores holds responsible, who introduced me your magazine at the most crucial time.
From our family records, I come to know that my father-in-law, Mr. R.Y. Samuel, an official of Kannan Devan tea estates, Munnar, now no more, used to receive your magazine but somehow he stopped receiving it at the evening of his life. Now I am happy to receive a copy of it for the simple reason that it is not available in the market. I am happy because I) it follows the good christian legacy left behind our ancestors, II) it emphasises on the teachings and principles of evangelization which is the corner stone of the churches but conveniently forgotten by them. Only laymen like you and a few Godly individuals carry the cross of evangelization, III) your message is balanced and doctrinally correct and it does not stoop to the level of the ordinary nor plays the tune to the gallery, IV) it is neither a journal nor a magzine in the traditional sense of the word, nor a booklet but it holds all the three ingrediants, V) IT IS NOT MEANT FOR THE CROWD BUT A FEW WHO LOVE THEIR MASTER AND LORD JESUS CHRIST. Precisely, you are the chip of the old block carrying out a crusade against cart and hypocrisy of the modern day churches and pastors. Keep on it and I am sure, God will bless you in all your endeavours richly.
I confidently believe that you must have successfully completed yet another north Indian Evangelical expedition, have’nt you?
My wife, Irine, joins me to send you her prayerful Xmas and new year greetings. Find enclosed a small contribution.
With love and prayers,
Yours gracefully,
Dr. P. Samuel Thangaraj,
Professor of English (Retired)
Kurinji Nagar, Madurai 625 014
(2)
“அண்ணன் அறிவது, உங்கள் தேவ எக்காளம் பத்திரிக்கையை ஒரு வருடமாக வாசித்து வருகின்றேன். உங்கள் பத்திரிக்கை மெய்யாகவே எனக்கும், என் உறவினர்களுக்கும், என் நண்பர்களுக்கும் மிகுந்த ஆசீர்வாதமாக இருந்து வருகின்றது. இது வெறும் எழுத்து மாத்திரமல்ல, என் இருதயத்தின் ஆழத்தில் உதிக்கும் நன்றி மடல் என்பதை ஆவியானவர் உங்களோடு சாட்சியிடுவார். என் தேவன் உங்களைப் பயன்படுத்தும் விதம் பார்க்கும் போது என் உள்ளம் நன்றியால் பொங்குகின்றது. உங்களைப்போன்ற உண்மையான ஊழியரைத் தந்த தேவனுக்கு இன்றும் என்றும் சதா காலங்களிலும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மகிமை உண்டாவதாக. ஆமென்” (பி. ஜெபக்குமார், கேரளா )
(3)
“1993 ஆம் ஆண்டின் ஜனுவரி/பெப்ரவரி தேவ எக்காள இதழ் வந்தது. ஆஸ்பத்திரியில் அதை வாசிக்க ஒரு கிறிஸ்தவ டாக்டர் வாங்கினார். நான் அந்த இதழில் ஒரே ஒரு பக்கம் மட்டும்தான் படித்திருந்தேன். அதை வாங்கிய டாக்டரிடம் பல முறை நான் கேட்டும் அவர் அதைத் திரும்ப தரவில்லை. பல சாக்குப்போக்குச் சொல்லிவிட்டார். எனக்கு மிகுந்த கவலை. மனவேதனை. அதை மறக்கவே முடியாமல் இருந்தேன். கூடியமட்டும் தேவ எக்காளம் பத்திரிக்கைகளை பத்திரமாக வைப்பேன். ஒரு வரி விடாது வாசிப்பேன். முடிந்தால் திரும்ப திரும்ப அதைப் படிப்பேன். அப்படியிருக்க அதை இழந்தது எதையோ பறி கொடுத்ததாக எண்ணி இருந்தேன். ஆனால், அண்ணா, கடந்த தேவ எக்காளம் இதழ் கிடைத்திராதவர்கள் உடனே எழுதி பெற்றுக்கொள்ளலாம் என்ற உங்களின் அறிவிப்பு எனக்கு ஒரு புதையல் கிடைத்திருந்தால் கூட நான் அத்தனை மகிழ்ச்சியடைய மாட்டேன். அத்தனை சந்தோசம். அந்த வரியைப்படித்த உடனே இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்து விட்டேன். அண்ணா, நீங்கள் இதுவரை அப்படி ஒரு அறிவிப்பு கொடுத்ததில்லை. என் அங்கலாய்ப்பை தேவன் பார்த்து தங்களை ஏவி எழுத வைத்திருக்கிறார் என்று எண்ணி என் தேவனைத் துதிக்கிறேன்.
தாங்கள் தேவ எக்காளத்தில் எழுதி இருப்பது போல் நான் என் மனமாற உலகத்தில் மற்றவர்களைப்போல் சிரித்து மகிழ்ந்ததே இல்லை. இதை சில நேரம் நான் நினைப்பேன். அதை உறுதி செய்வது போல இந்த தேவ எக்காள இதழ் 18 ஆம் பக்கம் 2 ஆம் வரியைப் படித்ததும்தான் நான் உண்மையாகவே தேவ அனுமதி என அறிந்து கொண்டேன். தேவ எக்காளம் ஒவ்வொரு வரியும் என்னை சிந்திக்க வைக்கும். எத்தனை உண்மை நிலை என்பதை உணர்ந்தேன். எங்கள் வீட்டிற்கு எப்போதுமே எத்தனையோ கிறிஸ்தவ பத்திரிக்கைகள் வரும். ஆனால், நான் அவைகளைப் பிரித்துப்படிக்க மனமில்லாமல் இருப்பேன். ஆனால், தேவ எக்காளம் வந்துவிட்டால் ஒரே சந்தோசத்தோடு அதைப் பிரித்து ஆவலுடன் படிப்பேன்” ( ஏ.சரோஜா, வாங்க பாளையம்)
(4)
“உங்கள் பத்திரிக்கையை என் பள்ளி, கல்லூரி நாட்களில் நான் தொடர்ச்சியாகப் படித்து வந்துள்ளேன். என் வீட்டிற்கு எத்தனையோ கிறிஸ்தவ பத்திரிக்கைகள் வந்தாலும் தேவ எக்காளம் மட்டும் பணம் பற்றியா, சுகமாக்கும் காரியங்களைப்பற்றியோ விளம்பரங்கள் செய்வதில்லை. மனிதனின் ஜீவியம் குறித்தே அது வலியுறுத்துவதை நான் அறிந்திருக்கின்றேன். இதுவே ஒரு உண்மை கிறிஸ்தவ ஊழியத்தின் அடித்தளம் என்று எண்ணுகின்றேன். இதுதான் நான் எனக்காக ஜெபிக்கும்படி உங்களுக்கு கடிதம் எழுதுவதின் காரணம்” ( ஒரு சகோதரன், சென்னை)
(5)
‘‘Beloved Brother in Christ, I find no word to say about the rich spiritual blessings we as a family receive from your book. This is the only book I read with prayer and care among the many christian magazines we receive. I don’t put it down till I finish it with prayer. If only our christian leaders could get the burden that you bear how happy our Lord would be. I must say, I walk with God and trust only Him for all my wants. THIS DEPENDENCE, A TOTAL SUBMISSION TO GOD’S WILL, I COULD SAY ONLY THROUGH YOU. Thank you brother. If ever you come to Madurai please let me know, we as a family are very eager to meet’’ (One brother from Madurai)
(6)
“அப்பா! தேவ எக்காளம் பத்திரிக்கையை யாருக்காவது வாசிக்கக் கொடுத்தாலும் அவர்கள் வாசித்த உடன்தானே நானே கேட்டு வாங்கி வந்த பின்னர்தான் எனக்கு திருப்தியாக இருக்கும். இதற்கு முன்னால் 2 தேவ எக்காளங்களை இழந்துவிட்டேன். நான் அனைத்து தேவ எக்காளங்களையும் சேர்த்து வைத்துப் பின் நாட்களில் என் பிள்ளைகள் வாசிக்க அவற்றை பைண்ட் பண்ண வேண்டுமென்றி ருக்கின்றோம். மிகவும் பிரயோஜனமான அந்த ஆவிக்குரிய புத்தகத்தை வெளியிடத் தேவையான தேவ பெலமும், சரீர பெலனும் தரும்படி நாங்கள் தினமும் உங்களுக்காக ஜெபிக்கின்றோம்” (செல்வசேனா கென்னடி, சைதாப்பேட்டை)
(7)
“எனது அன்பும் அருமையுமான ஆவிக்குரிய தகப்பனுக்கு, அன்பின் கண்மணி இயேசு அப்பா, தங்களை ஒரு முறை நேரில் காணும் அந்தப் பரிசுத்த பாக்கியத்தை எனக்குக் கொடுத்ததற்காக அவரை பரிசுத்த முத்தங்களோடு வாழ்த்துகின்றேன். கி.மு – கி.பி என சரித்திரத்தை இரண்டாகப் பிரிப்பது போல நான் இயேசு இரட்சகரண்டையில் வந்த பிறகு, சில ஆண்டுகள் கழித்து தேவ எக்காளத்தை வாசிக்கும் கிருபை பெற்ற எனது வாழ்க்கையை தேவ எக்காளம் படிப்பதற்கு முன்பு – தேவ எக்காளம் படித்த பிறகு என பிரித்து விடலாம்.
பரிசுத்தம், ஆயத்தம், மற்றவர்களை ஆயத்தப்படுத்துதல் போன்ற மும்மணிகளான கிறிஸ்தவ ஜீவியத்தின் இலக்குகளை எனது மனதில் இருத்திக் கொண்டேன். வட இந்தியா மற்றும் நேப்பாள ஊழியங்கள் மேல் எனது உள்ளம் பொங்குகின்றது. அந்தப் பரிசுத்த ஊழியங்களை எல்லா வகையிலும் தாங்க கர்த்தர் என்னைப் பெலப்படுத்தும்படி ஜெபிக்கின்றேன். வானில் பிரதான தூதனுடைய தேவ எக்காளம் தொனிக்கும் வரை நம்முடைய இந்த தேவ எக்காளம் தொனித்துக் கொண்டே இருக்க ஜெபிக்கின்றேன். முத்தங்களுடன், தங்கள் மகன்” (ஜாண் பிரபாகரன், சென்னை)
(8)
‘‘As I am writing this letter, tears are rolling down from my eyes to know that you have sent old issues of DEVA EKKALAM for a period of 4 years. In fact I wanted to write to you to get some old issues of Deva Ekkalam of 1989 issues as some issues are missing in transportation from Delhi. Our Almighty God has talked to you to send the issues fully bound. We are running short of words to thank you for the noble deed you have done. We thank you from the depth of our hearts’’ (P. Snehakumar, Madurai)
(9)
அன்புள்ள ஐயா, தங்களை நான் நேரில் பார்த்தது கிடையாது. தங்களுடைய பத்திரிக்கை மூலமாக நாங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளரும்படியாக மிகவும் அருமையான பத்திரிக்கையாக இருக்கின்றது. தங்களுடைய முகத்தை பார்க்கும்படியான கிருபையை ஆண்டவர் தருவார் என்று நம்புகின்றேன்.
தேவ எக்காளம் பத்திரிக்கையை படிக்கும்போது தங்களுடைய ஞானத்தைக் கண்டு சந்தோசப்படுவேன். “எப்படி எல்லாம் எழுதுகின்றார், எப்படி எல்லாம் ஊழியம் செய்கிறார்” என்று என் மனைவியிடம் சொல்லுவேன். அவ்வளவு சந்தோசம். தேவ எக்காளத்தின் ஒவ்வொரு வார்த்தையும் என்னுடன் பேசுவது போலிருக்கும். அவ்வளவு அருமை” ( எம்.ரவீந்திரன், மலேசியா)
(10)
‘‘Dear Brother in Christ, Gone through your magazine published last. I read it from cover to cover. It is very useful, interesting and inspiring. Your visits to Nepal, Himachal Pradesh in company with Bro.Norton was indeed a thrilling experience. It is the first time that I hear of Akhora Hindu Sadhus living on the flesh of dead men and women. Your instructions on how to observe fasting is an eye opener to me. May the Lord endue with greater power to testify to others of the Lord Jesus Christ especially in the North’’ (G.Sam John Rose, Tirunelveli)
(11)
“தேவ எக்காளம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கிறது. தேவ எக்காளம் பத்திரிக்கையை வாசிக்கும் போதெல்லாம் நான் இன்னும் என் ஆண்டவருக்குப் பிரியமாய் வாழவேண்டுமே, நான் இன்னும்ஆத்துமாக்களுக்காக அதிகம் ஜெபிக்க வேண்டுமே என்ற உண்மையான ஒரு பாரம், கண்ணீர் எனக்குத் தேவை என்பதை அதிகமாய் உணருகிறேன். தேவனோடு தனித்து உறவாடுவதையும், உபவாசித்து ஜெபிப்பதையும் தங்கள் வாழ்க்கையில் பார்க்கும்போது எனக்கும், என் கணவர் பிள்ளைகளுக்கும் இப்படிப்பட்ட ஆசை வருகின்றது. ஆனால் சூழ்நிலை எனக்குத் தடையாக இருக்கிறது.
தேவ எக்காளத்தைப் படித்ததிலிருந்து என் மகள் பிரிசில்லா வட இந்திய மக்கள் மீது ஆத்தும பாரம் வந்து கர்த்தருடைய ஊழியத்தைச் செய்ய வேண்டும் என்று விரும்பி ஜெபிக்கின்றாள்” (சுகந்தி ஜாண்சன், மதுரை)
(12)
கிறிஸ்துவுக்குள் மிகவும் மதிப்பிற்குரிய சகோதரர் ஐயா அவர்களுக்கு தங்கள் ஊழியங்களை அதிகமாக நேசித்து ஜெபிக்கும் சகோதரி எழுதும் அன்பின் கடிதம். தங்களது பத்திரிக்கை எங்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கிறது. தேவனுடைய பாதங்களில் அமர்ந்து ஜெபித்து எழுதும் கடிதங்கள், ஊழியங்களை நிறைவேற்ற கர்த்தர் கொடுத்த கிருபை வரங்கள், ஊழியத்தைக் குறித்த அறிக்கைகள், மிஷனரி வாழ்க்கை வரலாறுகள் யாவற்றிற்காகவும் தேவனுக்கு நன்றி சொல்லுகிறேன்.
அநேகமாக 1996 ஆம் ஆண்டு முதல் தேவ எக்காளத்தைப் பெற்று பயன் அடைகின்றேன். அந்த ஆண்டு முதல் தேவ எக்காளத்தை பொக்கிஷ வைப்பாக வைத்துள்ளேன். என் பிள்ளைகளுக்கு அவைகள் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். ஒரு நாளில் அவைகளால் அவர்கள் பயன் பெறுவர் என்று விசுவாசிக்கின்றேன். தேவன்தாமே தங்களுக்கு நல்ல சுகத்தையும், பெலத்தையும், தீர்க்காயுசையும் கொடுத்து தமது வருகை பரியந்தம் காத்து, அநேகரை நீதிக்குட்படுத்த கிருபைகளைத் தந்து காப்பாராக. உங்களுக்கு எங்கள் அன்பின் ஸ்தோத்திரம். (ஜே. தமயந்தி, வசந்த நகர், பெருமாள்புரம், திருநெல்வேலி)
(13)
கர்த்தருக்குள் அன்பான அண்ணன் அவர்களுக்கு ஸ்தோத்திரம் கூறி எழுதுவது, என் இரண்டாம் கடிதம் கிடைத்தவுடன் நீங்கள் அருமையாய் அனுப்பித்தந்த தேவ எக்காளம் (நவம்பர் – டிசம்பர் 2006) 27/3/07 ஆம் தேதியன்று மதியம் கிடைக்கப் பெற்று 28/3/07 மதியத்திற்குள் முழுப்புத்தகத்தையும் வாசித்து முடிக்க பெலன் கொடுத்த அன்பின் நேசருக்கு கோடி ஸ்தோத்திரங்கள். அட்டை கூடி அட்டை மிகவும் அருமை. “வில்லியம் கிரிம்ஷா” நவீன கால கிறிஸ்தவர்களுக்கு மதிப்பில்லாத ஒரு சாதாரண மனிதர். ஆனால், சேனைகளின் கர்த்தர், ராஜாதி ராஜா அவருடைய பார்வையில் ஒரு விலையேறப்பெற்ற பொக்கிஷம். அநேக இடங்களில் வாசிக்கும்போது அழுதேன். தலையங்கச் செய்தி என் உள்ளத்தை மிகவும் அசைத்தது. 28 ஆம் பக்கத்தில் 2 ஆம் பத்தியில் அநேக கர்த்தருடைய பிள்ளைகள் துன்ப துயரங்களோடு, கண்ணீரோடு 2007 ஆம் ஆண்டு பிரவேசம் எவ்வளவு வேதனை கண்ணீரோடு இருந்திருக்கின்றது என்ற இடத்தை வாசித்தபோது, நான் அழுதுகொண்டே, அண்ணனுக்கு உடனேயே ஒரு கடிதம் எழுதி இத்தகையதான துக்க சாகரத்திலும் கர்த்தர் நல்லவர் என்று எழுதியிருந்த வார்த்தைகளை வாசித்தபோது நான் மிகவும் களிகூர்ந்தேன். கர்த்தர் என்றென்றும் நல்லவர். மூன்று எச்சரிப்புகள்: உலகப்பற்று வேண்டாம், தேவனுக்கு துரோகம் செய்ய வேண்டாம், ஜெபத்திலே அவரோடு ஒன்றாகிவிடவேண்டும். இவைகளைச் செய்ய எசேக்கியேல் 36 : 27 ன்படி கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. (D.R.A.Manuel B.Sc.,(Agri), Trichy)
மராத்தி மொழியில் தேவ எக்காளத்தின் செய்திகள்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. மஹாராஷ்டிரா மாநிலம் பூனாவுக்கு அருகிலுள்ள கெட்கான் Kedgaon என்ற இடத்தில் பண்டிதை ராமாபாய் அம்மையார் தோற்றுவித்த முக்தி ஸ்தாபனம் உள்ளது. அந்த முக்தி ஸ்தாபனத்தை பார்ப்பதற்காக நான் 1977 ஆம் ஆண்டு அங்கு சென்றிருந்தேன்.
அந்த முக்தி ஸ்தாபனத்தில் ஒரு தமிழ் சகோதரி இருக்கின்றார்கள். அவர்கள் ஆண்டவருடைய மெய்யான இரட்சிப்பின் பாத்திரமாவார்கள். அவர்கள் தனது வாழ்க்கையை முற்றுமாக தன் இரட்சகர் இயேசுவுக்கு ஒப்புவித்து திருமணமில்லாமலேயே அந்த ஸ்தாபனத்தில் பணி செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் பெயர் வசந்தா டேவிட் என்பதாகும். M.Sc., பட்டதாரியான அவர்கள் நான் அங்கு சென்றிருப்பதை எப்படியோ கேள்விப்பட்டு என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்.
தன்னுடைய ஜீவிய காலத்தில் மராத்திப் பெண்களுக்காக பயனுள்ள ஏதாவதொன்றைச் செய்யத் தான் பெரிதும் ஆவல் கொண்டிருப்பதாக என்னிடம் கூறினார்கள். அந்த ஆவலின்படி மராத்தி மொழியை மிகவும் குறுகிய காலத்தில் நன்கு கற்று அம்மொழியிலேயே ஒரு மாதாந்திர கிறிஸ்தவ பத்திரிக்கையையும் தற்பொழுது ஆரம்பித்துவிட்டதாக சொன்னார்கள். அந்தப் பத்திரிக்கையின் பெயர் “முக்தி பாஹினி” (முக்தி சகோதரி) என்பதாகும்.
நமது “தேவ எக்காளம்” பத்திரிக்கையை மிகவும் ஆசை ஆவலாக விரும்பி வாசித்து வரும் அவர்கள் தேவ எக்காளத்திலுள்ள குறிப்பிட்ட நல்ல தரமான ஆவிக்குரிய செய்திகளை மராத்தியில் மொழி மாற்றம் செய்து தங்களது “முக்தி பாஹினி” யில் வெளியிட்டு வருவதாக என்னிடத்தில் மகிழ்ச்சி பொங்க சொன்னார்கள். எல்லா துதி, கனம், மகிமை நம் ஆண்டவர் ஒருவருக்கே.
இணையதளத்தில் தேவ எக்காளம்
நமது தேவ எக்காளம் பத்திரிக்கை இணைய தளத்திலும் (Website) வெளியிடப்படுவதால் இணையதளத்தில் தேவ எக்காளத்தை வாசித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட தேவ மக்கள் இ-மெயில் மூலமாக தாங்கள் பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளுகின்றனர். ஒரு இ-மெயில் கடிதத்தை மட்டும் கவனியுங்கள்:-.
“தேவனுக்கும், உங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். நீங்கள் தேவ எக்காளத்தில் மொழியாக்கம் செய்யும் பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள் எனக்கும் என் நண்பர்களுக்கும் மற்றும் பலருக்கும் ஆசீர்வாதமாக இருந்து வருகின்றது. அநேக பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆங்கிலத்தில் இருப்பதால் படிக்க முடிகின்றது. ஆனால் புரிந்து கொள்ள முடிவதில்லை. நீங்கள் அவைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதால் பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள் எங்களுக்கு புரியும் வண்ணமாக உள்ளது. என் நண்பர்களுக்கு நான் அவைகளை பிரிண்ட் எடுத்துக் கொடுத்துள்ளேன். அவர்களுக்கு அவைகள் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கின்றது என்று என்னிடம் சொன்னார்கள். மொத்தத்தில் அவைகள் எங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கின்றது. இன்னும் அநேக பரிசுத்தவான்களின் வாழ்க்கை சரித்திரங்களை நீங்கள் தமிழாக்கம் செய்யும்படி உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். சகோதரனே, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. ஆமென். (கோபால் இம்மானுவேல்)
ஒரு சமயம் நமது தேவ எக்காளம் பத்திரிக்கை சந்தாதாரர்களில் நாகாலாந்து மாநிலத்து கலெக்டர் I.A.S. ஒருவர் கூடஇருந்தார் என்றால் நீங்கள் கட்டாயம் ஆச்சரியம் அடைவீர்கள். தேவ எக்காளத்தை அவர்கள் அதிகமாக நேசித்து வாசித்தவர்கள். நமது சென்னையைச் சேர்ந்த தமிழ் கிறிஸ்தவ தேவப்பிள்ளையான அவர்கள் வீட்டிற்கும் அவர்கள் விருப்பப்படி நான் ஒரு தடவை சென்றதுண்டு. கர்த்தருக்கே மகிமை.